இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை வாழ்த்திய IMF இயக்குநர்


ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு
, இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்காக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும், தொடர்ச்சியான பொருளாதார சீர்திருத்தங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானவை எனவும், அவை முதலீடுகளை ஈர்ப்பதற்கும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் முக்கிய கூறாக இருப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி திசாநாயக்கவுடனான தனது முதல் மெய்நிகர் சந்திப்பின் போது, இந்த விடயங்களை ஜோர்ஜீவா பகிர்ந்துகொண்டார்.

இது தொடர்பாக தமது எக்ஸ் (X) சமூக வலைதள பதிவில், பொருளாதார சீர்திருத்தங்களின் அவசியத்தை ஜனாதிபதியிடம் எடுத்துரைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.