மலையக ரயில் சேவைகள் பாதிப்பு


மரம் மற்றும் பாறை சரிவுகள் காரணமாக மலையக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இங்குருஓயா மற்றும் கலபொட இடையே ரயில் பாதையில் மரமொன்று முறிந்து விழுந்துள்ளதுடன், ஹாலிஎல மற்றும் பதுளை இடையே பாறை சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் விளைவாக, மலையக ரயில் சேவைகள் தாமதமாகி உள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.