காசாவில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் நரம்பு மண்டலத்திற்குப் பெரும் அச்சுறுத்தல்!
காசா பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் குண்டுவீச்சுகள், ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு (Autism Spectrum Disorder) கொண்ட பாலஸ்தீனக் குழந்தைகளின் நரம்பியல் மற்றும் உளவியல் நலனில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து கேட்கும் பயங்கர வெடிச்சத்தங்கள் மற்றும் பாதுகாப்பற்ற சூழல் காரணமாக, இக்குழந்தைகளின் மனநலம் மற்றும் நடத்தையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.
இதனால் தூக்கமின்மை, திடீர் பீதி தாக்குதல்கள் உள்ளிட்ட உளவியல் பாதிப்புகளுடன், சில குழந்தைகள் தங்களைத் தாங்களே காயப்படுத்திக்கொள்ளும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் இதுவரை 73,380க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாகவும், காசாவின் பெரும் பகுதிகள் இடிபாடுகளாக மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
உலகம்
