யூடியூப் கிரியேட்டர்களுக்கு புதிய அதிர்ச்சி: பணமீட்டல் தகுதி வரம்பு இருமடங்காக அதிகரிப்பு!
யூடியூப் தளத்தில் புதிய சேனல்கள் மூலம் பணமீட்டும் (Monetization) வசதியைப் பெறுவதற்கான தகுதி வரம்புகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
யூடியூப் கூட்டாளர் திட்டமான YouTube Partner Program (YPP) இல் இணைந்து விளம்பர வருவாய் உள்ளிட்ட பணமீட்டல் வசதிகளைப் பெறுவதற்கான தகுதி விதிகளில் முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பணமீட்டலுக்கு தகுதி பெற விரும்பும் சேனல்கள் குறைந்தபட்சம் 1,000 சந்தாதாரர்களை கொண்டிருக்க வேண்டும்.
மேலும், கடந்த 12 மாதங்களில் பதிவேற்றப்பட்ட நீண்ட வடிவிலான காணொளிகளுக்கான மொத்த பார்வை நேரம் 4,000 மணிநேரத்திலிருந்து 8,000 மணிநேரமாக அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, YouTube Shorts மூலம் தகுதி பெற விரும்பும் சேனல்கள், கடந்த 90 நாட்களில் 10 மில்லியன் பார்வைகளுக்குப் பதிலாக 20 மில்லியன் பார்வைகளை பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய தகுதி வரம்புகள் 2027 பெப்ரவரி 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், YouTube Partner Program மூலம் பணமீட்டலை எதிர்பார்க்கும் புதிய மற்றும் வளர்ந்து வரும் உள்ளடக்க உருவாக்குநர்கள், முன்பைவிட அதிகமான பார்வை நேரம் அல்லது Shorts பார்வைகளைப் பெற வேண்டிய நிலை ஏற்படும்.
