முதலமைச்சர் விஜய்க்கு எதிராக தாக்கல் செய்த விவாகரத்து மனுவை வாபஸ் பெற்றார் சங்கீதா – வழக்கை முடித்து வைத்த நீதிமன்றம்!


தமிழ்நாடு முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்க்கு எதிராக அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை அவர் திரும்பப் பெற்றுள்ளார்.

இதையடுத்து, செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றம் குறித்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.

விசாரணையில் திருப்பம்

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், முதலமைச்சர் விஜய் தரப்பில் நேரில் ஆஜராக விலக்கு கோரப்பட்டது. சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்று வருவதால் அவர் நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

இருவரும் பிரபலமானவர்கள் என்பதால், காணொளி வாயிலாக ஆஜராக அனுமதி வழங்குமாறு இரு தரப்பினரும் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதன்படி, லண்டனில் இருந்த சங்கீதா காணொளி மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகி, விவாகரத்து மனுவை திரும்பப் பெறுவதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, வழக்கை முடித்து வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னதாக, விஜய் மற்றும் சங்கீதா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், சங்கீதா செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.