சிறைச்சாலைகளில் ஏற்பட்ட மோதல்கள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன – அமைச்சர் விஜேபால!


இலங்கையின் பல சிறைச்சாலைகளில் நேற்றிரவு முதல் ஏற்பட்டிருந்த மோதல் மற்றும் அமைதியின்மை நிலைமை தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகளில் நிலவும் போதைப்பொருள் பிரச்சினையே இந்த மோதல்களுக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என தெரிவித்த அமைச்சர், பிரச்சினைகள் ஏற்பட்ட அனைத்து சிறைச்சாலைகளிலும் நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும், இந்த மோதல்கள் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், எனினும் முழுமையான விசாரணை நடத்தப்படாமல் அது தொடர்பில் உறுதியான கருத்தை வெளியிட முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த விடயத்தை அரசாங்கம் மிகவும் தீவிரமாகக் கவனித்து வருவதாகவும், ஜனாதிபதி தலைமையில் இன்று இது தொடர்பில் விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் குறிப்பிட்டார்.