பேராதனைப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 10ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பம்!


சீரற்ற வானிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் எதிர்வரும் 10ஆம் திகதி முதல் மீண்டும் வழமைக்குத் திரும்பவுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 10ஆம் திகதி முதல் அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் வழமைபோன்று முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தெரிவித்துள்ளார்.

மேலும், பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் எதிர்வரும் 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் விடுதிகளுக்குத் திரும்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் உபவேந்தர் குறிப்பிட்டுள்ளார்.