டெங்கு மரணங்கள் 68 ஆக உயர்வு!


நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

புதிய தரவுகளின்படி, இந்த ஆண்டில் இதுவரை 91,059 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பதிவாகியுள்ள மொத்த நோயாளர்களில் 52.98 வீதமானோர், அதாவது 48,244 பேர் மேல் மாகாணத்திலேயே இனங்காணப்பட்டுள்ளனர்.

மாவட்ட ரீதியாக அதிகளவான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அங்கு 19,406 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் 18,101 பேரும், கண்டி மாவட்டத்தில் 6,491 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கடந்த ஜூலை மாதத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அந்த மாதத்தில் 29,971 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் 119 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் தொடர்ந்தும் டெங்கு அதிஅபாய வலயங்களாக சுகாதாரப் பிரிவினரால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.