இலங்கை பைத்துல்மால் நிதியத்தின் 2026 பல்கலைக்கழக புலமைப்பரிசில் குறித்த அறிவித்தல்!


இலங்கை பைத்துல்மால் நிதியத்தினால் 2026ஆம் ஆண்டிற்கான பல்கலைக்கழக புலமைப்பரிசில்களுக்கு (Scholarships) தகுதியுடைய மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இலங்கை அரசாங்கப் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும், தகுதியுடைய மாணவர்கள் இந்தப் புலமைப்பரிசில் திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள்

• ஸகாத் பெறுவதற்குத் தகுதியுடைய, வறுமைக்கோட்டிற்குட்பட்ட முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த மாணவராக இருத்தல் வேண்டும்.

• 2024 (2025)ஆம் ஆண்டு க.பொ.த. (உயர் தர)ப் பரீட்சையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

• தற்போது இலங்கை அரசாங்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியுடைய மாணவர்கள் கூகுள் படிவத்தின் மூலம் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பப் படிவம்:
https://forms.gle/TbQhmRosk1QnQhk58

கூகுள் விண்ணப்பப் படிவத்திற்கான இணைப்பைப் பெற விரும்புவோர் c.baithulmal@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு சிறிய கோரிக்கையை அனுப்பி, விண்ணப்பப் படிவத்திற்கான இணைப்பைப் பெற்றுக்கொள்ள முடியும்.

முக்கிய திகதி

விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி: 2026 ஆகஸ்ட் 15

எனவே, தகுதியுடைய பல்கலைக்கழக மாணவர்கள் இறுதித் திகதிக்கு முன்னர் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மேலதிக தகவல்களுக்கு

தொலைபேசி:
011 2599075
077 6211708