2025 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்: பல்கலைக்கழகப் பதிவுகள் ஆரம்பம்!


2025 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், சாதாரண அனுமதி (Normal Intake) மூலம் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பதிவு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) அறிவித்துள்ளது.

மாணவர் பதிவுகள் எதிர்வரும் ஓகஸ்ட் 14 ஆம் திகதி வரை நடைபெறும் எனவும், பதிவுகளுடன் தொடர்புடைய மேன்முறையீடுகளை (Appeals) ஓகஸ்ட் 21 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகப் பிரவேசம் மற்றும் பதிவு தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.ugc.ac.lk ஐ பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.