குருவிட்ட சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட மோதலில் 2 கைதிகள் உயிரிழப்பு – 4 பேர் காயம்!
இரத்தினபுரி, குருவிட்ட சிறைச்சாலைக்குள் இன்று காலை ஏற்பட்ட மோதலில் இரு கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நான்கு கைதிகள் காயமடைந்துள்ளனர்.
குறித்த சிறைச்சாலையில் நேற்றிரவு பதற்றமான நிலை ஏற்பட்டிருந்த நிலையில், அது பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இன்று காலை மீண்டும் சிறைச்சாலைக்குள் கைதிகளுக்கு இடையே பதற்ற நிலை உருவாகியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் பொலிஸாரால் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Tags:
இலங்கை செய்தி
