பாலியல் துஷ்பிரயோக முயற்சி குற்றச்சாட்டில் SJB நகர சபை உறுப்பினர் கைது!


ஐக்கிய மக்கள் சக்தி (SJB) சார்பில் தேசிய பட்டியல் ஊடாக காத்தான்குடி நகர சபைக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர் ஒருவர், பாலியல் துஷ்பிரயோக முயற்சி குற்றச்சாட்டின் பேரில் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காத்தான்குடி கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள, குறித்த உறுப்பினருக்குச் சொந்தமான சுற்றுலாப் பயணிகள் விடுதியில் (Guest House) பணியாற்றி வந்த 21 வயதுடைய பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண், காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார். அதன் அடிப்படையில் ஆரம்ப விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட நகர சபை உறுப்பினர், விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.