டெங்கு காரணமாக மூடப்பட்டிருந்த கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு!
டெங்கு பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கொழும்பிலுள்ள கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று (13) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்ததைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜூலை 2 ஆம் திகதி முதல் சுமார் இரண்டு வாரங்களுக்கு பல்கலைக்கழகம் மூடப்பட்டிருந்தது.
பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், வளாகத்தை சுத்தமாகப் பேணுவதிலும் டெங்கு பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளிலும் மாணவர்கள் பொறுப்புடன் ஒத்துழைக்குமாறு பல்கலைக்கழக பதிவாளர் கலாநிதி சானி இம்புல்கொட கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையில், இந்த ஆண்டில் இதுவரை நாடு முழுவதும் 68,071 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், டெங்கு காரணமாக இதுவரை 47 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன என்றும் அப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
Tags:
இலங்கை செய்தி
