இலங்கையில் எல் நினோ தாக்கம் தீவிரமடையும் அபாயம்; ஒக்டோபர் முதல் அசாதாரண காலநிலை மாற்றங்களுக்கு வாய்ப்பு!


எல் நினோ காலநிலை மாற்றம் தற்போது பலவீனமான நிலையில் ஆரம்பமாகியுள்ள போதிலும், எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அதன் தாக்கம் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பூகோள வானிலை முன்னறிவிப்பு தரவுகளின் அடிப்படையில், எல் நினோ காரணமாக இலங்கை மட்டுமன்றி உலகின் பல நாடுகளிலும் அசாதாரண காலநிலை மாற்றங்கள் பதிவாகும் சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2027 ஜனவரி மாதம் வரை எல் நினோ நிலைமை தீவிரமடைவதற்கான சாத்தியம் 63 சதவீதமாக இருப்பதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.