பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்களுக்கு செப்டெம்பர் 30 வரை கால அவகாசம்!
பதிவு செய்யப்படாத அனைத்து முதியோர் இல்லங்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தேசிய முதியோர் செயலகம் எச்சரித்துள்ளது.
முதியோர் இல்லங்களை பதிவு செய்து கொள்வதற்காக எதிர்வரும் செப்டெம்பர் 30ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக செயலகம் தெரிவித்துள்ளது.
குறித்த காலக்கெடுவுக்குள் பதிவு செய்யாத முதியோர் இல்லங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய முதியோர் செயலகத்தின் பணிப்பாளர் சதுர மிஹிதும் தெரிவித்துள்ளார்.
தேசிய முதியோர் செயலகத்தின் தகவலின்படி, நாடு முழுவதும் இயங்கி வரும் 459 முதியோர் இல்லங்களில் இதுவரை 148 இல்லங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால், பதிவு செய்யப்படாத இல்லங்கள் விரைவில் பதிவு நடவடிக்கைகளை நிறைவு செய்யுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Tags:
இலங்கை செய்தி
