IMF இலிருந்து இலங்கைக்கு 695 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி!


சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் கீழ், இலங்கைக்கு அங்கீகரிக்கப்பட்ட 5 மற்றும் 6 ஆம் தவணைகளுக்கான 695 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி உத்தியோகபூர்வமாக கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வரும் பொருளாதார சீர்திருத்தத் திட்டங்களின் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்ததைத் தொடர்ந்து, இந்த இரு தவணைகளுக்கான நிதியும் ஒரே கட்டமாக விடுவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் தகவலின்படி, கிடைக்கப்பெற்றுள்ள இந்த நிதி நாட்டின் வெளிநாட்டு நாணயக் கையிருப்பில் நேரடியாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வரும் இலங்கையின் நிதி நிலைத்தன்மையையும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் மேலும் வலுப்படுத்துவதில் இந்த நிதியுதவி முக்கிய பங்காற்றும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.