பெற்றோரின் சொத்துகளைப் பெற்றுக்கொண்டு அவர்களை கைவிட்டு செல்லும் பிள்ளைகளுக்கு கடும் நடவடிக்கை!
பெற்றோரின் சொத்துகளைப் பெற்றுக்கொண்டு பின்னர் அவர்களை பராமரிக்காமல் கைவிடும் பிள்ளைகளுக்கு எதிராக புதிய சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இதுகுறித்து ஆரம்பக்கட்ட கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அதன்படி, பெற்றோர்களை கைவிடும் பிள்ளைகளிடமிருந்து அவர்களின் சொத்துகளை மீளப் பெறுதல் மற்றும் சில சந்தர்ப்பங்களில் அவற்றை அரசுடைமையாக்குவது போன்ற யோசனைகள் பரிசீலனையில் உள்ளதாக அவர் கூறினார்.
மேலும், கைவிடப்படும் அல்லது பராமரிப்பின்றி தவிக்கும் பெற்றோர்களை அரசு நேரடியாக பராமரிக்கும் அமைப்பை உருவாக்குவதும் பரிசீலிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோரின் நலன் மற்றும் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
Tags:
இலங்கை செய்தி
