நீர்நிலைகளில் நீராடுவோருக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!


2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் நீரில் மூழ்கி 122 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களில் 113 ஆண்களும் 09 பெண்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2024ஆம் ஆண்டில் 595 பேரும் (510 ஆண்கள், 85 பெண்கள்), 2025ஆம் ஆண்டில் 376 பேரும் (309 ஆண்கள், 67 பெண்கள்) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 2024 முதல் 2026ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் மொத்தமாக 1,093 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இவ்வாறு உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகைக் காலங்களில் ஆறுகள், குளங்கள், கடற்கரை உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு செல்லும் பிள்ளைகள் மற்றும் இளைஞர்கள் தொடர்பில் பெற்றோர்கள் அதிக அவதானத்துடன் இருக்க வேண்டும் என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.