அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு சற்று அதிகரிப்பு!
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று (08) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு சற்று உயர்வடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதன்படி, டொலரின் விற்பனை வீதம் 342 ரூபாய்க்குக் கீழ் குறைந்துள்ளது.
மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவலின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு வீதம் 332.27 ரூபாயில் இருந்து 331.22 ரூபாயாக குறைந்துள்ளதுடன், விற்பனை வீதம் 342.00 ரூபாயில் இருந்து 341.04 ரூபாயாக குறைந்துள்ளது.
அதேபோல், அவுஸ்திரேலிய மற்றும் கனேடிய டொலர்கள், யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் சுவிஸ் பிராங்க் உள்ளிட்ட முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கெதிராகவும் ரூபாயின் மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது.
மேலும், வளைகுடா நாடுகளின் நாணயங்களுக்கெதிராகவும் ரூபாய் சற்று வலுவடைந்துள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
Tags:
இலங்கை செய்தி
