இலங்கையில் மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை!
அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் தகவலின்படி, இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த சனிக்கிழமை (20) 24 கரட் தங்கத்தின் ஒரு பவுண் ரூ. 382,000 ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று (22) அதன் விலை ரூ. 2,000 அதிகரித்து ரூ. 384,000 ஆக பதிவாகியுள்ளது.
அதேவேளை, 22 கரட் தங்கத்தின் ஒரு பவுண் ரூ. 353,300 ஆக விற்பனை செய்யப்படுகின்றது. மேலும், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் ரூ. 48,000 ஆகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் ரூ. 44,163 ஆகவும் பதிவாகியுள்ளது.
சர்வதேச தங்க சந்தையில் ஏற்பட்டுள்ள விலை மாற்றங்கள் மற்றும் உள்ளூர் சந்தை தேவையின் தாக்கமே இந்த விலை உயர்வுக்குக் காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
Tags:
இலங்கை செய்தி
