டீசல் விலை குறைப்பு - பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கடும் விமர்சனம்!
ஜூலை 01 முதல் வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் அமலுக்கு வரவுள்ள நிலையில், டீசல் விலை குறைக்கப்பட்டமை அரசாங்கத்தின் தவறான நேரத் தீர்மானம் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டிருந்த 20% பேருந்து கட்டண உயர்வு தற்போது 15% முதல் 17% வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் கட்டண திருத்தம் தொடர்பாக உரிய கலந்துரையாடல் வழங்கப்படவில்லை என்றும், இதனால் உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய கொள்கைக்கு ஏற்ப போதுமான கட்டண உயர்வு வழங்கப்படாவிட்டால் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
அத்துடன், டீசல் விலை நிர்ணயம் மற்றும் கட்டண திருத்த செயல்முறையில் அரசாங்கம் வெளிப்படையாக நடக்கவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Tags:
இலங்கை செய்தி
.jpeg)