பொதுமக்களுக்கு தரமான அத்தியாவசிய நுகர்பொருட்கள் நியாயமான விலையில் - கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை!
பொதுமக்களுக்கு தரமான அத்தியாவசிய நுகர்பொருட்களை நியாயமான விலையில் வழங்கும் நோக்கில், லங்கா சதொச நிறுவனம் ஊடாக 25 அத்தியாவசிய பொருட்களை நேரடியாக இறக்குமதி செய்ய கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசேகர, தற்போது சந்தையில் கிடைக்கும் சில அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்து நுகர்வோர் மத்தியில் எழுந்துள்ள கவலைகளுக்கு தீர்வு காண்பதே இந்த திட்டத்தின் பிரதான நோக்கம் என தெரிவித்துள்ளார்.
மேலும், வர்த்தக சந்தையில் இடைத்தரகர்களால் ஏற்படும் கூடுதல் செலவுகளை குறைத்து, அதன் மூலம் பொதுமக்கள் மீது சுமத்தப்படும் நிதிச் சுமையை தணிப்பதற்கும் இந்த நேரடி இறக்குமதி திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையின் மூலம் தரமான பொருட்களை குறைந்த விலையில் மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:
இலங்கை செய்தி
