நீர் விநியோக கட்டமைப்பில் திடீர் கோளாறு : கொழும்பின் முக்கிய பகுதிகளில் நீர்வெட்டு!


கொழும்பின் பிரதான நீர் விநியோக அமைப்பில் திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அம்பத்தலை மற்றும் கொலன்னாவை பகுதிகளுக்கு இடையிலான பிரதான நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இன்று (05) இரவு 8.00 மணி வரை மொரகஸ்முல்ல, ராஜகிரிய, நாவல, ஒபயசேகரபுர மற்றும் கொலன்னா நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என சபை தெரிவித்துள்ளது.

பழுதுபார்ப்பு பணிகள் நடைபெற்று வருவதுடன், பொதுமக்கள் தேவையான அளவு நீரை முன்கூட்டியே சேமித்து பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.