தங்கம் விலை சரிவு; மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!
இலங்கையில் இன்று (04) 24 கரட் தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, தற்போதைய சந்தை நிலவரத்தில் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 387,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
அதேவேளை, 22 கரட் தங்கம் ஒரு பவுண் 356,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராம் அடிப்படையில், 24 கரட் தங்கத்தின் விலை 48,375 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் விலை 44,500 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
தங்க விலையில் ஏற்பட்டுள்ள இந்த சிறிய வீழ்ச்சி நகை வாங்குவோருக்கு ஓரளவு நிவாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:
இலங்கை செய்தி
