இரு லொறிகள் மோதி விபத்து: இருவர் பலி!
பூநாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-9 வீதியின் கல்கந்தேகம பகுதியில் இடம்பெற்ற கோரமான விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
வவுனியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த லொறியொன்று, வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த மற்றுமொரு லொறியின் பின்புறமாக மோதியுள்ளது. மோதிய தீவிரத்தால், இயக்கத்தில் இருந்த லொறி கட்டுப்பாட்டை இழந்து, நிறுத்தப்பட்டிருந்த லொறியின் மீது தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று (17) புதன்கிழமை காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பூநாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில், நிறுத்தப்பட்டிருந்த லொறியின் பின்புறத்தில் இருந்த இருவர் பலத்த காயமடைந்த நிலையில் மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 33 மற்றும் 46 வயதுடைய நுரைச்சோலை பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்து பூநாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.