யானைக்கால் நோயை ஏற்படுத்தும் ஒட்டுண்ணி : சுகாதார அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை!


மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஃபைலேரியாசிஸ் எனப்படும் யானைக்கால் நோயை ஏற்படுத்தக்கூடிய ஒட்டுண்ணி குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சுகாதார அமைச்சகத்தின் யானைக்கால் நோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசன்னா சேரசிங்க, வெள்ளிக்கிழமை (05) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கையில், “புருகியா மலாயி” (Brugia malayi) எனப்படும் இந்த ஒட்டுண்ணி காரணமாக கடந்த 5 மாதங்களில் 7 பேர் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

இந்த நிலைமை சரியாக கட்டுப்படுத்தப்படாவிட்டால், நாடு முழுவதும் தொற்று பரவக்கூடிய அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.