சொல்லிசை பாடகர் சங்கீதன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது : கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்!
சொல்லிசை பாடகர் சங்கீதன் செவ்வாய்க்கிழமை (02) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சனிக்கிழமை (06) கிளிநொச்சி மாவட்ட பழைய கச்சேரி முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
தமிழ் மக்களின் அவலங்கள், தியாகங்கள், வீரமும் வாழ்வியலும் குறித்து தனது சொல்லிசை மூலம் பாடி வந்த இளைய கலைஞர் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை, தமிழ் படைப்பாளிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து கிளிநொச்சியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, “விடுதலை செய் சங்கீதனை விடுதலை செய்”, “சட்டத்தின் ஆட்சி சமமாக இருக்கட்டும்”, “கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்காதே”, “பாடும் உரிமை எங்கள் உரிமை”, “பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கு” உள்ளிட்ட பல கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலைஞர்கள், பொதுஅமைப்புகளின் பிரதிநிதிகள், மத தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
Tags:
இலங்கை செய்தி
