பரிகார பூஜை என்ற பெயரில் மாணவி துஷ்பிரயோகம்; முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது!
மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை வழங்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும் அரசியல் அமைப்பாளருமான ஒருவர் மாவனல்லை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
19 வயதுடைய மாணவி ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்று மாலை இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆரம்ப விசாரணைகளின் படி, சந்தேகநபர் நடத்தி வந்த உள்நாட்டு ஆயுர்வேத மருத்துவ மையத்தில், மாணவியின் கிரக தோஷம் மற்றும் தீய சக்திகளை நீக்குவதற்காக பரிகார பூஜை நடத்துவதாகக் கூறி பாலியல் தொல்லை வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவி மாவனல்லை பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸாரின் சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
Tags:
இலங்கை செய்தி
