6,000 ரூபாயினால் அதிகரித்த தங்க விலை!


நாட்டில் தங்கத்தின் விலை இன்று (15) சுமார் 6,000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய காலை தங்க விற்பனை நிலவரத்தின் படி, 24 கரட் தங்கம் ஒரு பவுன் 392,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

அதேநேரம், 22 கரட் தங்கம் ஒரு பவுன் 360,600 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள இந்த உயர்வு, சந்தை நிலவரத்தில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.