அங்குருவாத்தொட்ட முதியோர் இல்ல தீ விபத்து சம்பவம் : பணிப்பாளர் கைது!


அங்குருவாத்தொட்ட, படாகொட பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில், அதன் பணிப்பாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று ஹொரணை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 12 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த 71 பேரில் 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 51 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குருவாத்தொட்ட பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.