நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம் - பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!
சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம் இன்று முதல் நாளை மறுதினம் வரை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகிறது.
இதன்படி, 14 மாவட்டங்களில் உள்ள 74 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்த வேலைத்திட்டத்திற்கு பொலிசார் மற்றும் முப்படையினரின் ஒத்துழைப்பும் பெறப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
டெங்கு அபாயம் அதிகமாகக் காணப்படும் பகுதிகளுக்கு விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதுடன், நுளம்பு பெருகும் வகையில் சூழலை பராமரிக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படவுள்ளன.
தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு பரவும் அபாயம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்குமாறு சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
Tags:
இலங்கை செய்தி
