மீண்டும் சரிந்த தங்க விலை!


இலங்கையில் நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில் இன்று (05) 24 கரட் தங்கம் ஒரு பவுணுக்கு 1,000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 386,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 355,200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேவேளை, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,400 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

இதனிடையே, இலங்கை மத்திய வங்கி இன்று (05) வெளியிட்டுள்ள நாளாந்த செலாவணி அறிக்கையின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 332.27 ரூபாவாக பதிவாகியுள்ளது.

டொலரின் விற்பனை விலை இன்று 342.00 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில், நேற்று (04) அது 340.25 ரூபாவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தங்க விலையில் சரிவு ஏற்பட்டுள்ள போதிலும், அமெரிக்க டொலரின் விற்பனை விலையில் சிறிய அளவிலான உயர்வு பதிவாகியுள்ளது.