இலங்கையில் அதிகரிக்கப்படவுள்ள நீர்க்கட்டணம்!


குடிநீர்க்கட்டணம் மிகச் சிறிய அளவில் அதிகரிக்கப்படும் என்று வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (02) நடைபெற்ற நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வொன்றில் உரையாற்றியபோது அமைச்சர் இதுகுறித்து கருத்து வெளியிட்டார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், குடிநீருக்கான கட்டண உயர்வானது மின்சாரக் கட்டண உயர்வைப் பொறுத்தே அமையும் என தெரிவித்தார்.

“மின்சாரக் கட்டணத்தை எடுத்துக்கொண்டால், அதில் 12% குடிநீர்க்கட்டணமும் அடங்கும். அந்த 12%-இல் 18% உயர்த்தப்பட்டுள்ளது என்று நான் கருதுகிறேன்.

குடிநீர்க்கட்டணம் உயருமா இல்லையா என்று மக்கள் கேட்கிறார்கள். 12%-இல் 18% உயர்த்தப்பட்டுள்ள அந்தக் கட்டணமே குடிநீரின் யூனிட் கட்டணத்தில் மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது.

அதாவது, அது மிகச் சிறிய அளவிலான உயர்வாகும். அதன்படி, மின்சாரக் கட்டணத்தில் ஏற்படும் இந்த ஏற்ற இறக்கம் குடிநீர்க்கட்டணத்தையும் பாதிக்கிறது” என அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.