மத்திய வங்கி வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!
இலங்கைக்குள் ஏற்றுமதி வருமானத்தைப் பெறும் அனைத்து ஏற்றுமதியாளர்களும், தங்களது மாதாந்த வருமானத்தில் எஞ்சிய தொகையை அடுத்த மாதத்தின் 10ஆம் திகதிக்கு முன்னதாகவோ அல்லது அன்றைய தினத்திற்குள்ளோ கட்டாயமாக இலங்கை ரூபாவாக மாற்ற வேண்டும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
ஏற்றுமதியாளர்கள் தங்களுக்குக் கிடைக்கும் மொத்த வருமானத்திலிருந்து, மத்திய வங்கியினால் அனுமதிக்கப்பட்ட குறிப்பிட்ட செலவுகளுக்காக மட்டுமே நிதியைப் பயன்படுத்த முடியும். அவ்வாறு பயன்படுத்திய பின்னர் கணக்கில் எஞ்சியிருக்கும் தொகையை மட்டுமே உள்நாட்டு நாணயமான இலங்கை ரூபாவாக மாற்ற வேண்டும் என மத்திய வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த நடைமுறை, வெளிநாட்டு நாணய வருவாயை ஒழுங்குபடுத்துவதற்கும் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
Tags:
இலங்கை செய்தி
