அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி!


அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (3) வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாளாந்த நாணய மாற்று விகித அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 328.00 ரூபாயாகவும், விற்பனை விலை 337.97 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

நேற்று (02) மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட விகிதங்களின்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 326.75 ரூபாயாகவும், விற்பனை விலை 336.60 ரூபாயாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.