இலங்கை பொருட்களுக்கு 12.5% கூடுதல் வரி விதிக்க அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் பரிந்துரை!


கட்டாய உழைப்பின் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களின் இறக்குமதியைத் தடை செய்யவும், அதனை முறையாக நடைமுறைப்படுத்தவும் தவறியதாகக் கூறி, இலங்கை உட்பட 60 நாடுகளிலிருந்து வரும் இறக்குமதி பொருட்களுக்கு கூடுதல் வரிகளை விதிக்க அமெரிக்க வர்த்தக பிரதிநிதி (USTR) அலுவலகம் பரிந்துரை செய்துள்ளது.

இதன் படி, சீனா, இந்தியா மற்றும் தென் கொரியாவுடன் இலங்கையும் 12.5% என்ற உயர்ந்த வரி விதிப்புக்கு முன்மொழியப்பட்ட நாடுகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதே நேரத்தில், பங்களாதேஷ் மற்றும் கம்போடியா உள்ளிட்ட நாடுகளுக்கு 10% என்ற குறைந்த வரி விகிதம் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.