லிட்ரோ எரிவாயு விலைத் திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!


இந்த மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தம் இன்று (05) அறிவிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாதாந்த எரிவாயு விலை திருத்தம் தொடர்பான அறிக்கைகள் தற்போது நிதி அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் லாஃப்ஸ் எரிவாயு விலை உயர்த்தப்பட்ட போதிலும், லிட்ரோ நிறுவனம் தனது எரிவாயு விலையில் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த மாதத்திற்கான புதிய விலை திருத்தம் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.