இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் நடாத்தப்படும் பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் போது, தேசிய அடையாள அட்டை இலக்கம் அவசியம்!


இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் நடத்தப்படும் அனைத்து பரீட்சைகளுக்கும் விண்ணப்பிக்கும் போது தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கத்தை குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெறவுள்ள 2026 க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு விண்ணப்பிக்கவுள்ள மாணவர்களின் தேசிய அடையாள அட்டைகளை முன்கூட்டியே பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே, குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படுவதற்கு முன்னர், அனைத்து பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்களும் தங்களது தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வது அவசியம் என பரீட்சைகள் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.