60 மருந்து வகைகளின் விலைகளை அதிகரிக்க நடவடிக்கை!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், மருந்துகளின் விலைகளை அதிகரிப்பது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை (NMRA) தெரிவித்துள்ளது.
இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக, அந்த அதிகாரசபையின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
அதன்படி, இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளின் விலைகளை உயர்த்துவதற்கான முதற்கட்ட திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அரசாங்க வர்த்தமானி அறிவிப்பின் மூலம் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள 60 அத்தியாவசிய மருந்து வகைகளின் விலைகளையும் திருத்தி உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்த விலை உயர்வு தொடர்பான இறுதி தீர்மானம் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:
இலங்கை செய்தி
