இலஞ்சம் கோரினால் 1954 துரித இலக்கத்திற்கு உடனடியாக அறிவிக்குமாறு கோரிக்கை!


திடீர் மரண விசாரணை பரிசோதகர்கள் தங்களது கடமைகளை நிறைவேற்றுவதற்காக பணம், இலஞ்சம் அல்லது வேறு எந்தவொரு அனுகூலத்தையும் கோரினால் உடனடியாக அதுகுறித்து அறிவிக்குமாறு நீதித்துறை மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதற்காக அமைச்சின் 070 272 4637 என்ற வாட்ஸ்அப் இலக்கத்திற்கோ அல்லது இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் 1954 என்ற அவசர இலக்கத்திற்கோ தகவல் வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றவியல் வழக்குச் சட்டத்தின் 108வது பிரிவின் கீழ், நீதிமன்ற நடவடிக்கைகளை இலகுபடுத்தும் நோக்கில் திடீர் மரண விசாரணை பரிசோதகர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

அவர்கள் நாளின் எந்த நேரத்திலும் தங்களது சேவையை வழங்க வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளதுடன், அந்தச் சேவைக்காக பணம் அல்லது வேறு சலுகைகளை பெற்றுக்கொள்வது சட்டவிரோதமான செயலாகும் என அமைச்சு வலியுறுத்தியுள்ளது.