பொலிஸ் ஆட்சேர்ப்புக்கான விண்ணப்ப இறுதித் திகதி நீடிப்பு!
இலங்கை பொலிஸ் துறையில் பயிற்சிப் பொலிஸ் கான்ஸ்டபிள், பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் இறுதித் திகதி 2026 ஜூன் 1ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
2026 மார்ச் 27ஆம் திகதியிட்ட 2482ஆம் இலக்க அரசாங்க வர்த்தமானி அறிவித்தலின் அடிப்படையில் இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முன்னதாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் இறுதித் திகதி 2026 மே 8ஆம் திகதியாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 2026 மே 15ஆம் திகதியிட்ட 2489ஆம் இலக்க புதிய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் அந்தத் திகதி தற்போது ஜூன் 1ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் அனைத்தும் முழுமையாக இணையவழி முறைமையின் ஊடாக மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும் என பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், இணையவழி விண்ணப்பங்களில் தொழில்நுட்ப அல்லது நடைமுறை சிக்கல்கள் ஏற்படும் பட்சத்தில், விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட தொலைபேசி இலக்கங்கள் மூலம் பொலிஸ் ஆட்சேர்ப்புப் பிரிவை தொடர்புகொண்டு தேவையான உதவிகளைப் பெற முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
📞 071-8591925
📞 011-2505202
📞 011-2552953
