கிழக்கு மாகாண காணிகளைப் பாதுகாக்க விசேட குழு!


கிழக்கு மாகாணத்தில் காணி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவரின் தலைமையில் விசேட செயலணி அமைக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி காணிகள் சட்டவிரோதமாக கையகப்படுத்தப்படுவது கிழக்கு மாகாணத்தில் பல சிக்கல்களுக்கு வழிவகுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை (22) அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோது ஜனாதிபதி இந்த கருத்துகளை வெளியிட்டார்.

இதன்போது அம்பாறை மாவட்டத்தில் நிலவி வரும் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாகவும் அவர் கவனம் செலுத்தினார். கல்வி அலுவலகங்கள், பிரதேச செயலகங்கள் உள்ளிட்ட நிர்வாக அமைப்புகளை உருவாக்குவது ஒரு நிர்வாகப் பொறுப்பாகும்; அது அரசியல் நோக்கத்திற்கான செயல் அல்ல என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.