நாளை நாட்டின் பல பகுதிகளில் 100 மி.மீற்றருக்கும் அதிக கனமழை பெய்யும் சாத்தியம்!


வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நாளை (23) நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடிய சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிக மழை எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் சீரற்ற வானிலை நிலைமைகள் ஏற்படக்கூடியதால் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.