வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்!
அரசாங்கம் வாகன இறக்குமதிகளுக்கு 50% மேலதிக வரி விதித்ததைத் தொடர்ந்து, நாட்டில் வாகன விலைகள் விரைவில் அதிகரிக்கக்கூடும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய வரி, ஏற்கனவே நிலவும் வரிகளும் நாணய மாற்று வீத உயர்வும் இணைந்ததால், வாகன வகையைப் பொறுத்து சுமார் 15 இலட்சம் முதல் 25 இலட்சம் ரூபா வரை கூடுதல் செலவு ஏற்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
சிறிய, நடுத்தர மற்றும் SUV வகை வாகனங்கள் அனைத்தும் இந்த விலை உயர்வால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தொழில்துறை தரப்புகள் கூறுகின்றன.
இதன் விளைவாக, இறுதியில் முழு சுமையும் நுகர்வோர்மீதே விழும் நிலை உருவாகும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
Tags:
இலங்கை செய்தி
