இலங்கைப் பிக்கு சமூகத்தைச் சுற்றி அரங்கேறிய சம்பவங்கள் : ஓமல்பே சோபித தேரர் விடுத்துள்ள எச்சரிக்கை!


தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் தராதரத்தைப் பொருட்படுத்தாமல் துறவறத்திலிருந்து நீக்க வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், சாசனச் சீர்திருத்தங்களை முன்னெடுக்க தர்ம மாநாடு ஒன்று அவசியம் எனவும் குறிப்பிட்டார்.

மேலும், மகா நாயக்க தேரர்கள் சங்க நீதிமன்றத்திற்கு அரச அதிகாரங்களைப் பெற்றுக்கொள்வதற்காக விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அண்மைக்காலமாக இலங்கைப் பிக்கு சமூகத்தைச் சுற்றி சில கவலைக்கிடமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. எனினும், சிலர் செய்யும் தவறுகளுக்காக முழு பிக்கு சமூகத்தையும் குற்றம் சாட்டுவது தவறானது என்றும் அவர் தெரிவித்தார்.

எனவே, தவறு செய்பவர்களுக்கு எதிராக தர்மத்தின் அடிப்படையில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இது தொடர்பாக மகா நாயக்க தேரர்கள் அரசாங்கத்துக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளதாகவும், அவற்றை தற்போது நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதாகவும் ஓமல்பே சோபித தேரர் கூறியுள்ளார்.