பலத்த மழை - அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சாரதிகளுக்கு எச்சரிக்கை!
நாட்டில் தற்போது நிலவும் கடும் மழை மற்றும் சீரற்ற வானிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சாரதிகள் அதிக அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலைகளில் காணப்படும் மின்சார தகவல் பலகைகளில் காட்சிப்படுத்தப்படும் எச்சரிக்கை அறிவிப்புகளை கவனமாகப் பின்பற்றுமாறும் சாரதிகளிடம் கோரப்பட்டுள்ளது.
மேலும், மழைக்கால நிலைமை காரணமாக வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்து பயணிக்க வேண்டியது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, மணிக்கு 60 கிலோமீட்டர் வேக எல்லையை மீறாமல் வாகனங்களை செலுத்துமாறும், இரு வாகனங்களுக்கு இடையில் போதிய இடைவெளியைப் பேணுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, திடீரென பிரேக் பயன்படுத்தும் போது வாகனங்கள் வழுக்கிச் செல்லும் அபாயம் இருப்பதால், மிகுந்த கவனத்துடன் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்குமாறும் சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tags:
இலங்கை செய்தி
