நாட்டில் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு!


நாட்டில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வரை தேவைக்கு ஏற்ப போதுமான எரிபொருள் கையிருப்பு நிலவுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்ததாவது, நவம்பர் மாதம் வரையிலான எரிபொருள் கொள்வனவுகளுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன என கூறினார்.

அதன்படி, அமெரிக்காவிலிருந்து 90,000 மெற்றிக் தொன் மசகு எண்ணெயை ஏற்றிய கப்பல் ஒன்று இம்மாதம் 28 ஆம் திகதி இலங்கையை வந்தடைய உள்ளது.

மேலும், இன்னொரு மசகு எண்ணெய் கப்பலும் இம்மாதம் 31 ஆம் திகதி நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, சமீப காலங்களில் நாட்டின் எரிபொருள் பயன்பாட்டில் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.