இலங்கை ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி மீண்டும் உயர்வு!
இலங்கை ரூபாயுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் மாற்று விகிதம் இன்று (20) மேலும் உயர்வைக் கண்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தினசரி நாணய மாற்று விகிதத் தகவலின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூபா 332.08 ஆகவும், விற்பனை விலை ரூபா 342.70 ஆகவும் பதிவாகியுள்ளது.
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், டொலரின் பெறுமதி கணிசமான உயர்வை பதிவு செய்துள்ளது. நேற்று (19) அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 328.23 ஆகவும், விற்பனை விலை ரூபா 338.07 ஆகவும் இருந்தது.
இதற்கிடையில், அரச வங்கி ஒன்றில் இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை ரூபா 345.20 ஆகவும், கொள்வனவு விலை ரூபா 335.65 ஆகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags:
இலங்கை செய்தி
