இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை தொடர்பில் வெளியான தகவல்!


இறக்குமதி செய்யப்பட்ட பால் மாவின் விலையில் உயர்வு ஏற்படுத்தப்பட உள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் அறிவித்துள்ளனர்.

அதன்படி, புதிய பால் மா கையிருப்புகள் சந்தைக்கு விநியோகிக்கப்படும் நிலையில், 400 கிராம் பால் மா பக்கெட்டின் விலை ரூபா 50 ஆகவும், ஒரு கிலோகிராம் பால் மா பக்கெட்டின் விலை ரூபா 125 ஆகவும் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.