அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று கடும் வீழ்ச்சி!
அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்றைய தினம் (21) மேலும் குறைந்துள்ளதாக நாணய மாற்றுச் சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று 354.03 இலங்கை ரூபாயாக உயர்ந்துள்ளதுடன், 354 ரூபாய் எல்லையையும் கடந்துள்ளது.
அதேவேளை, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 342.63 ரூபாயாக பதிவாகியுள்ளது.
மேலும், 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 02ஆம் திகதிக்குப் பின்னர், அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாய் பதிவுசெய்துள்ள மிகக் குறைந்த பெறுமதிகளில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
Tags:
இலங்கை செய்தி
